கோவில் வரலாறு History
. பொருள்தந்த குலம் :
கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது . செத்தும் கெடுத்தான் சீதக்காதி . இவனும் பொருள் தந்தவன்தான் . கடையேழு வள்ளல்கள் பொருள் தந்தவர்களே . ஆய், நள்ளி, பேகன் , ஆகியோர் மாரியன்ன கொடை கொடுத்தவர்கள் . பசித்து வந்தவர்களுக்கும் , யாசித்து வந்தவர்களுக்கும் வரையாது கொடுத்த வள்ளல்கள் பொருள் தந்த குலத்தினர் . ஆந்தை குலம் பிறழந்து பிரிந்து வந்ததென்பதெல்லாம் கற்பனைக்கதை .பொருள்தந்த குலத்தினர் பலபிரிவாகப் பிரிந்து போயினர் . பிறழந்தை, பொருளந்தை, புறளந்தை என்பதெல்லாம் திரிந்தசொல் மரபுகள் . கரூர் அமராவதிக்கரையில் வாழ்ந்த பொருள்தந்த குலத்தினர் தோட்டக்குறிச்சி மலையம்மனை வழிபட்டனர் . ஏழூரில் உள்ள பண்னையம்மனை பொருள்தந்த குலத்தினர் வழிபட்டனர் . கட்டி, நல்லகட்டி, கட்டியண்ணன் ஆகிய பெயர்களைப் பெற்றவர்கள் பொருள்தந்த குலத்தினரே, கட்டிபாளையம் உள்ளதை அறிக. கருமாபுரம் , பிடாரியூர், காடையூர், முத்தூர், தோட்டக்குறிச்சி , கீரைமடை, விசயமங்களம், கள்ளிப்பட்டி , ஆறுதொழு, ஆலம்பட்டி , பரமத்தி, புன்னம் , பவுத்திரம் , தென்பள்ளி , ஆகியன பொருள் தந்த கூட்டத்தாரின் காணி ஊர்களாம்